தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'ஒலிம்பிக்கில் சர்வதேச அளவில் 10 நாடுகளுக்குள் ஒன்றாக இந்தியாவை மாற்றுவதே இலக்கு!' - இந்தியாவை பத்து ஒலிம்பிக் தேசிய நாடுகளில் ஒன்றாக மாற்றுவதே இலக்கு

மும்பை: 2028ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறும் கோடைகால ஒலிம்பிக்கில், உலகளவில் 10 நாடுகளுக்குள் ஒன்றாக இந்தியாவை மாற்றுவதே இலக்கு என்று மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.

ஒலிம்பிக்
ஒலிம்பிக்

By

Published : Jun 14, 2020, 7:24 PM IST

2028ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் ஒலிம்பிக்கில், உலகளவில் 10 நாடுகளுக்குள் ஒன்றாக இந்தியாவை மாற்றுவதே இலக்கு என்று மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர், 'வரவிருக்கும் நாட்களில், இந்தியாவின் பங்கேற்பு மட்டுமல்லாமல், இந்தியாவின் வெற்றி விகிதமும் மிக அதிகமாக இருக்க வேண்டும் என்பதை நான் உறுதிபடுத்த விரும்புகிறேன்.

எனவே, 2028ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை முதல் 10 ஒலிம்பிக் நாடுகளில் ஒன்றாக மாற்றுவதே இலக்கு. இதுதான் நான் நிர்ணயித்த இலக்கு. இந்திய ஒலிம்பிக் சங்கம் மற்றும் அனைத்து தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளுடனும் நாங்கள் சில திட்டங்களையும் யுக்திகளையும் உருவாக்கியுள்ளோம்' எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: கே.பி‌. இராமலிங்கம் முதலமைச்சர் பழனிசாமியுடன் சந்திப்பு: திமுகவில் தொடங்கிய 'களேபரம்'?

ABOUT THE AUTHOR

...view details