எழுத்துலகவாசிகளால் கி.ரா என அன்போடு அழைக்கப்படும் எழுத்தாளர் கி. ராஜநாராயணன் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்துள்ள இடைசெவல் கிராமத்தில் 1922ஆம் ஆண்டு செப்டம்பர் 16ஆம் தேதி பிறந்தார்.
கரிசல் இலக்கியத்தின் முன்னோடி எனப் போற்றப்படுகிற இவர் 1958ஆம் ஆண்டு தனது சரஸ்வதி இதழ் மூலம் எழுத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தினார். ஏழாம் வகுப்புவரை மட்டுமே படித்துள்ள இவர் புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் சிறப்பு பேராசிரியராக பணியாற்றும் நிலையை அடைந்தார். அதற்கு காரணம் அவரது எழுத்து.