ஆந்திரா: சென்னை தாம்பரம் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன்(43) என்பவர் ஆந்திர மாநிலத்திலுள்ள அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் படித்துவந்தார். நேற்று (ஜனவரி 2) தேர்வு எழுதிக்கொண்டிருந்த அவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரை அருகிலிருந்த மருத்துவமனையில் கல்லூரி நிர்வாகம் அனுமதித்தது.
ஆந்திராவில் தேர்வு எழுதிக்கொண்டிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் உயிரிழப்பு - ambedkar law college Tirupati
ஆந்திர மாநிலம் திருப்பதியிலுள்ள அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் தேர்வு எழுதிக்கொண்டிருந்த சென்னை தாம்பரம் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவில் தேர்வு எழுதிக்கொண்டிருந்த தமிழ்நாடு மாணவர் உயிரிழப்பு
அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். பாலமுருகன் உயிரிழந்ததை அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு கல்லூரி நிர்வாகம் தெரிவித்தது. பாலமுருகன் உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:கட்சி தொடங்காத ரஜினி! உயிரை விட்ட ரசிகர்!