கேரள மாநிலத்தில் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு தம்பனூர் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து தினமும் மதியம் 2.30 மணிக்கு பெங்களூருவுக்கு சிறப்பு பேருந்து வசதி தொடங்கப்பட்டுள்ளது. 31 இருக்கைகள் கொண்ட ஏசி பேருந்து, அது மட்டுமல்லாமல் 15 படுக்கை வசதிகள் கொண்ட ஏசி பேருந்து வசதியையும் எஸ்இடிசி தொடங்கியுள்ளது.
திருவனந்தபுரத்தில் இருந்து பெங்களூருக்கு பேருந்து வசதி! - பேருந்து வசதி
திருவனந்தபுரம்: தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் திருவனந்தபுரத்தில் இருந்து பெங்களூருவுக்கு புதிய பேருந்து வசதியை தொடங்கியுள்ளது.
மேலும், தமிழ்நாடு போக்குவரத்து கழகம் திருவனந்தபுரத்தில் இருந்து பெங்களூருவுக்கும், திருவனந்தபுரத்தில் இருந்து சென்னைக்கும் தினசரி பயணிகள் செல்வதற்காக பேருந்து வசதியை தொடங்கியுள்ளது. குறிப்பாக திருவனந்தபுரத்தில் இருந்து சென்னைக்கு சேலம், கோயம்புத்தூர் வழியாக பேருந்து செல்கிறது. இதற்கான டிக்கெட் முன்பதிவு www.tnstc.com இணையத்திலோ அல்லது தம்பனூர் முன்பதிவு கவுன்டரிலோ பதிவு செய்து கொள்ளும் வசதி உள்ளது.
இதையடுத்து புதிதாகத் தொடங்கியுள்ள பேருந்து வசதிக்கு கட்டணச் செலவும் குறைவாகவே உள்ளது. தனியார் பேருந்து கட்டணத்தை ஒப்பிடுகையில் எஸ்இடிசி பேருந்து கட்டணம் குறைவாகவே இருக்கும் என்றும், பண்டிகை நாட்களில் மட்டும் கூடுதலாக இருக்கும் என்றும் போக்குவரத்து அலுவலர் தெரிவித்துள்ளார்.