திமுக கூட்டணியில் தமிழ்நாடு, புதுச்சேரி காங்கிரஸ் கட்சிக்கு பத்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. காங்கிரஸ் வேட்பாளர்களைத் தேர்வு செய்யும், மத்திய தேர்தல் குழுக் கூட்டம், நேற்று (மார்ச் 22) மாலை வேளையில் டெல்லியில் கூடியது. அக்கூட்டம் முடிந்த பின், வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில், ஏழாவது கட்டமாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள எட்டு தொகுதிகளுக்கும் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தொகுதிகளும் வேட்பாளர்களும்:
- திருச்சி - காங்கிரஸ் மாநிலமுன்னாள் தலைவர் திருநாவுக்கரசர்,
- தேனி - ஈவிகேஎஸ் இளங்கோவன்,
- ஆரணி - விஷ்ணு பிரசாத்,
- கரூர் - ஜோதிமணி,
- விருதுநகர் - மாணிக்தாகூர்,
- கிருஷ்ணகிரி - செல்லக்குமார்,
- திருவள்ளூர் - ஜெயக்குமார்,
- கன்னியாகுமரி - வசந்தகுமார்