தமிழ்நாடு காவல் உயர் அலுவலர்கள் பணி இடமாற்றம் - tamilnadu government news
சென்னை: தமிழ்நாடு அரசு இன்று பல காவல் அலுவலர்களை பணி இடமாற்றம் செய்தும் சில அலுவலர்களை புதிதாக நியமனம் செய்தும் உத்தரவிட்டுள்ளது.
காவல் அலுவலர்கள் பணி இடமாற்றம்
தமிழ்நாடு அரசு அவ்வப்போது ஐஏஎஸ் அலுவலர்கள், ஐபிஎஸ் அலுவலர்களை பணியிடமாற்றம் செய்தும் புதிதாக அலுவலர்களை நியமித்தும் உத்தரவு பிறப்பித்துவருகிறது. அந்தவகையில் இன்று தமிழ்நாடு அரசு, காவல் அலுவலர்கள் பலரை பணியிடமாற்றம் செய்தும் சிலரை புதிதாக நியமனம் செய்தும் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்கள் விவரம் கீழே:
ஐபிஎஸ் அலுவலர்களின் பெயர் | புதிய பதவி | பழைய பதவி |
தீபக் எம். தாமோர் | திருநெல்வேலி மாநகர ஆணையர் | காத்திருப்போர் பட்டியல் (ஐ.ஜி.) |
என். பாஸ்கரன் | சென்னை காவல் துறை இயக்கத்தில் காலியாக இருந்த மண்டலத் தலைவர் (ஐ.ஜி.) | திருநெல்வேலி மாநகர ஆணையர் |
ரங்கராஜன் | சென்னை குற்றப்பிரிவு சிஐடி-III காவல் கண்காணிப்பாளர் | சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் மண்டலத் துணைத் தலைவர் (எ.ஐ.ஜி.) |
நிஷா பார்த்திபன் | பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் | சென்னை குற்றப்பிரிவு சிஐடி-III காவல் கண்காணிப்பாளர் |
திஷா மிட்டல் | திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் | பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் |
கயல்விழி | உளூந்தூர்பேட்டை டிஎஸ்பி எக்ஸில் (TSP X) காலியாக இருந்த கமாண்டன்ட் பிரிவு | திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் |
- தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலத் துறை செயலராக இருந்த சுனில் பாலிவால் காமராஜர் துறைமுக கழகத் (KPL) தலைவராக மத்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ளார்.