தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வாழ்த்திய மனங்களுக்கு நன்றி! - உருகிய தமிழிசை - ட்வீட்டரில் நன்றி

தெலங்கானாவின் ஆளுநராக நியமிக்கப்பட்ட தமிழிசை சௌந்தரராஜனுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும், அவர் நன்றி தெரிவித்து ட்வீட்டரில் பதிவுட்டுள்ளார்.

தமிழிசை

By

Published : Sep 1, 2019, 8:39 PM IST

தமிழ்நாடு பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜனை, தெலங்கானா ஆளுநராக மத்திய அரசு இன்று நியமித்தது. இதற்கு பல அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து, தமிழிசை சௌந்தரராஜன் தனது ட்வீட்டர் பக்கத்தில், "என்னை தெலங்கானாவின் ஆளுநராக தேர்ந்தெடுத்ததற்கு நன்றி. என்மீது நம்பிக்கை வைத்து எனக்கு இந்த வாய்ப்பை தந்த பிரதமர் மோடி , அமித்ஷா ஆகியோருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தேசத்திற்கு சேவை செய்வதற்கான ஒரு வாய்ப்பாக இதை நான் உணர்கிறேன். மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளதற்காக நேரிலும், தொலைபேசியிலும் வாழ்த்துக்கள் தெரிவித்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எனது நன்றிகள்" என பதிவுட்டுள்ளார்.

வாழ்த்து தெரிவர்களுக்கு - ட்வீட்டரில் நன்றி தெரிவித்த தமிழிசை.

தமிழிசை சவுந்தரராஜன் ஆளுநராக பதவியேற்க உள்ளதால், அவர் பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும், தமிழ்நாடு பாஜக தலைவர் பொறுப்பிலிருந்தும் விலகிக் கொண்டார். இதனையடுத்து, தமிழ்நாடு பாஜகவுக்கு தலைமையேற்க போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details