தெலங்கானவில் செயல்பட்டு வரும் பல்கலைக்கழகங்களின் எதிர்காலத் திட்டங்கள், செயல்பாடுகள், கல்லூரிகளின் உள்கட்மைப்பு சீரமைப்பு குறித்து 15 துணை வேந்தர்களுடன் தெலங்கானா ஆளுநர் தமிழிசை ஆலோசனை நடத்தினார். ஜதராபாத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கார் பல்கலைக் கழகத்தில் இந்த கூட்டம் நடைப்பெற்றது.
கல்லூரி துணைவேந்தர்களுடன் தமிழிசை ஆலோசனை! - governor meeting with 15 vice chancellors telangana
ஹைதராபாத்: தெலங்கானாவில் செயல்பட்டுவரும் பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகள் குறித்து துணைவேந்தர்களுடன் தெலங்கானா ஆளுநர் தமிழிசை ஆலோசனை நடத்தினார்.
tamilisai
பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளை ஊக்குவிக்கவும், ஆராய்ச்சி ஆவணங்கள் மற்றும் செயல்பாடுகளின் தரவுகளை சேகரிக்கவும் துணை வேந்தர்களுடன் ஆளுநர் அறிவுறுத்தினார். கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட பிரச்னைகள் முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கு தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும் துணை வேந்தர்களிடம் தமிழிசை கூறியுள்ளார்.
இதையும் படிங்க: பனிமலர் கல்லூரியில் இளம் தலைமுறையினருக்கு தன்னம்பிக்கையூட்டும் கருத்தரங்கம்!