கொரோனாவால் பாதிக்கப்பட்ட தமிழர் - tamil guy affected corono virus
18:37 March 07
ஓமனிலிருந்து இந்தியா வந்த தமிழருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மத்திய சுகாதாரத்துறை சிறப்புச் செயலாளர் சஞ்சீவகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், மூன்று பேருக்கு கூடுதலாக கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இந்தியாவில் 34 ஆக உயர்ந்துள்ளது. இதில், ஓமனிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்த ஒருவருக்கும், ஈரானில் இருந்து லடாக் பகுதிக்கு வந்த இரண்டு பேருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். மேலும், கொரோனா சோதனை மையங்களை அதிகப்படுத்த பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.