தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

முகக் கவசமாக மாறிய தாம்பூல பை: வைரலாகும் கணொலி - covid-19 lockdown

புதுச்சேரி: முகக் கவசத்திற்கு பதிலாக திருமணத் தாம்பூல பையை அணிந்து வந்தவரை காவல்துறையினர் விசாரித்த கணொலி சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.

pudhucherry
pudhucherrypudhucherry

By

Published : Apr 24, 2020, 10:18 AM IST

கரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் பொதுமக்கள் அத்தியாவசியப் பொருள்களை வாங்க மட்டுமே வெளியில் வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளர். அப்படி வரும் போது, முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியைப் பின்பற்றி அத்தியாவசியப் பொருள்களை வாங்கிச் செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. முகக் கவசம் அணியாமல் சென்றால் 100 ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது.

தாம்பூல பையை அணிந்து வந்த நபர்

அதன்படி, புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் முதியவர் ஒருவர் முகக் கவசத்திற்கு பதிலாக திருமணத் தாம்பூல பையை முகத்தில் கட்டி நடந்துச் சென்றுள்ளார். அப்போது அப்பகுதியில் பணியிலிருந்த புதுச்சேரி காவலர்கள் அவரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அதில் அவர், முகக் கவசத்தை வீட்டிலேயே மறந்து வைத்துவிட்டேன், அதனால் பாதுகாப்பிற்காக இதை அணிந்துள்ளேன் எனத் தெரிவித்தார். அதுகுறித்த கணொலி பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க:கரோனா நிவாரண நிதி வழங்காத மத்திய அரசு - புதுச்சேரியில் நாளை போராட்டம்

ABOUT THE AUTHOR

...view details