தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

முதல்முறையாக சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கையை விஞ்சிய குணமடைந்தோரின் எண்ணிக்கை!

டெல்லி: இந்தியாவில் முதல்முறையாக கரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கையை, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை முந்திச் சென்றுள்ளது.

INDIA CORONA COUNT
INDIA CORONA COUNT

By

Published : Jun 10, 2020, 5:31 PM IST

சீனாவின் வூஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கரோனா வைரஸ், அதிவேகமாகப் பரவி உலகையே தன் கோரப்பிடிக்குள் சிக்கவைத்துள்ளது. இந்தியாவிலும் அதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், முதல்முறையாக தொற்று பாதிப்பு ஏற்பட்டு இந்தியாவில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கையை, குணமடைந்தோரின் எண்ணிக்கை முந்திச் சென்றுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "இன்றைய நிலவரப்படி கரோனாவால் பாதிக்கப்பட்டு நாடு முழுவதும் 1 லட்சத்து 33 ஆயிரத்து 632 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேவேளையில், இதுவரை 1 லட்சத்து 35 ஆயிரத்து 205 பேர் பூரண குணமடைந்துள்ளனர். இந்தியாவில் குணமடைவோர் விழுக்காடு 49ஆக உள்ளது" எனக் கூறப்பட்டுள்ளது.

அதேசமயம் கடந்த 24 மணி நேரத்தில் 279 உயிரிழந்துள்ளதால், உயிரிழப்பு எண்ணிக்கை 7 ஆயிரத்து 745ஆக உயர்ந்துள்ளதாகவும் கூறியுள்ளது. இந்தியாவில் இதுவரை 2 லட்சத்து 76 ஆயிரத்து 583 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க : உலகளவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 70 லட்சத்தைக் கடந்தது!

ABOUT THE AUTHOR

...view details