உத்தரப் பிரதேசத்தில், ஜான்பூரில் உள்ள ஃபிரோஸ்பூரைச் சேர்ந்த அஹ்மத், மார்ச் மாதம் நிஜாமுதீனில் நடைபெற்ற சமய மாநாட்டில் கலந்து கொண்டு டெல்லி திரும்பியிருந்தார். இந்த மாநாட்டில் கலந்து கொண்ட 14 பங்களாதேஷ்கள் உட்பட 16 நபர்கள் ஜான்பூர் சென்று படா மஸ்ஜித்தில் (Bada Masjid) தங்கியுள்ளனர்.
மாநாட்டில் கலந்து கொண்டவர்களுக்குக் கரோனா இருக்கும் என்ற அச்சத்தால் காவல் துறையினர் பங்கேற்றவர்களை தீவிரமாகத் தேடி வந்தனர். இதனால் அச்சமடைந்த 16 பேரும் நசீம் உதவியை நாடியுள்ளனர். இவர்களுக்கு லால் மஸ்ஜித் பகுதியில் ரகசியமாகத் தங்குவதற்கு இருப்பிடத்தை அகமது ஏற்பாடு செய்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, மார்ச் 31 ஆம் தேதி, தலைமறைவான 16 நபர்களையும் காவல் துறையினர் வெவ்வேறு பிரிவுகளின் கீழ், வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், நசீம் அகமது தான் தங்கும் இடத்தை ஏற்பாடு செய்திருந்தது தெரியவந்தது. பின்னர், முதலில் அஹ்மதைத் தனிமைப்படுத்தி கரோனா பரிசோதனை நடத்தினர்.