மதுபானம் கடைகளுக்கு முன்பு, கூட்டத்தை தவிர்ப்பதற்காக மதுபானத்தை வீட்டிற்கு டோர் டெலிவரி செய்யும் திட்டத்தை பல மாநில அரசுகள் அறிமுகப்படுத்தியிருந்தது. இச்சூழலைப் பயன்படுத்திக் கொண்டு ஸ்விகி நிறுவனம், பல மாநில அரசிடமும் மதுபானத்தை வீட்டிற்கு நேரடியாக டெலிவரி செய்ய அனுமதியளிக்குமாறு பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலம், ஸ்விகி நிறுவனத்திற்கு மதுபானத்தை டோர் டெலிவரி செய்ய அனுமதியளித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இச்சேவையானது ஜார்க்கண்ட் அரசாங்கத்திடமிருந்து தேவையான ஒப்புதல்களைப் பெற்றவுடன், மக்கள் பயன்பாட்டிற்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக ஸ்விகி செயலியில், 'வைன் ஷாப்' என்ற புதிய வகை இணைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நிறுவனம் தரப்பில் கூறுகையில், "வாடிக்கையாளர்களின் வயதினை உறுதிசெய்த பிறகே, மதுபானம் டெலிவரி செய்யப்படும். வாடிக்கையாளர்கள் தங்களின் அரசாங்க அடையாள அட்டையின் புகைப்படத்தை செயலியில் பதிவேற்ற வேண்டும். அனைத்து ஆர்டர்களும் ஒரு தனித்துவமான OTP எண்ணும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும். கரோனா காலத்தில் மாநில அரசின் அறிவுறுத்தல்களை மதித்து, வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து வந்தோம்.
எங்களின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பாதுகாப்பான முறையில் மதுபானங்களை வீட்டுக்கு வழங்குவதின் மூலம், கடைகளில் உள்ள கூட்ட நெரிசல் சிக்கலைத் தீர்த்து, தகுந்த இடைவெளியை மக்கள் மத்தியில் ஊக்குவிக்க முடியும்" எனக் குறிப்பிட்டுள்ளனர்.
இதையும் படிங்க:கரோனா ஊரடங்கால் ஊழியர்கள் பணி நீக்கம் - திணறும் ஸ்விகி!