தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'மிஸ் செய்த பொருட்களை ஒப்படைக்க இனி 1 மணி நேரம் தான்': புதிய முயற்சியில் களமிறங்கும் ஸ்விகி! - புதிய முயற்சியில் ஸ்விகி

பெங்களூரு: உணவு பொருட்களை மட்டும் டெலிவரி செய்யும் ஸ்விகி நிறுவனம், தற்போது சலவை துணிகள் உள்ளிட்டவற்றையும் டெலிவரி செய்ய முயற்சிகள் மேற்கொண்டுவருகிறது.

swiggy

By

Published : Sep 4, 2019, 11:51 PM IST

இந்தியாவின் பெரிய உணவு டெலிவரி நிறுவனம் ஸ்விகி. இது, தற்போது "ஸ்விகி கோ" மூலம் முக்கிய ஆவணங்கள், சலவைத் துணிகள், வீட்டிலேயே மறந்துவிட்டு வந்த சாவி போன்றவற்றை டெலிவரி செய்யவுள்ளது. தற்போது, பெங்களூருவில் மட்டும் இது செயல்பட்டு வருகிறது. பின்னர், ஹைதராபாத்திலும் 2020ஆம் ஆண்டுக்குள் 300 நகரங்களுக்கும் இந்த சேவை விரிவுப்படுத்தப்படும் என ஸ்விகி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய முயற்சியில் களமிறங்கும் ஸ்விகி

மளிகைப் பொருட்கள், பூக்கள், மருந்துகள் உள்ளிட்டவற்றையும் ஒரு மணி நேரத்திற்குள் டெலிவரி செய்ய இது காத்துக்கொண்டிருக்கிறது. நகரப்புற சேவைகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல இந்த ஸ்விகி கோ உதவும் என அந்நிறுவனம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details