டெல்லி சஹாத்ரா மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் 10 வயது சிறுமி படித்து வருகிறார். அந்த சிறுமியின் பெற்றோர் பிகாரீல் வசித்து வருகின்றனர். அதனால் அக்குழந்தை உறவினர் வீட்டில் தங்கி படித்து வருகிறார்.
பள்ளி ஊழியரால் 10 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை! - delhi
டெல்லி: சஹாத்ரா மாவட்டத்தில் 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பள்ளி ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், கடந்த பிப்ரவரி 5-ம் தேதி அச்சிறுமியை பள்ளி வளாகத்தில், அங்கு துப்புரவு பணியாளராக பணியாற்றி வரும் இளைஞர், பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இதுகுறித்து வேறு யாரிடம் கூறினால் கொன்று விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.
தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து உறவினர்களிடம் சிறுமி அழுதபடியே பகிர்ந்துள்ளார். இதையடுத்து, உறவினர்கள் சஹாத்ரா காவல் நிலையத்தில் வந்து புகார் அளித்தனர். வழக்குப்பதிவு செய்த போலீசார், அந்த துப்புரவு பணியாளர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் நேற்று துப்புரவு பணியாளரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.