தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மோடி பதவியேற்பு விழா: பங்கேற்காத தலைவர்கள்! - BJP

டெல்லி: மோடி இரண்டாவது முறையாக பிரதமாக பதவியேற்கவுள்ள நிலையில், மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்கள் இந்த விழாவில் பங்கேற்கப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளனர்.

leaders

By

Published : May 30, 2019, 10:32 AM IST

Updated : May 30, 2019, 4:55 PM IST

நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி 352 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. இதில் பாஜக மட்டும் 303 இடங்களைப் பெற்றது. டெல்லியில் இன்று இரவு 7 மணியளவில் மோடி இரண்டாவது முறையாக பிரதமராகப் பதவியேற்க உள்ளார். அவருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைக்க உள்ளார்.

இந்தப் பதவி ஏற்பு விழாவிற்கு அனைத்து மாநில முதலமைச்சர்கள், ஆளுநர்கள், முன்னாள் குடியரசுத் தலைவர்கள், பிரதமர்கள், திரையுலகப் பிரபலங்கள் என பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும், வங்கதேசம், மியான்மர், இலங்கை, தாய்லாந்து, நேபாளம், பூடான் ஆகிய நாடுகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மு.க.ஸ்டாலின்

இந்த விழாவில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மன்மோகன் சிங், குலாம் நபி ஆசாத் ஆகியோரும் பங்கேற்கவுள்ளனர். மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், நடிகர் ரஜினிகாந்த் ஆகியோரும் இதில் பங்கேற்க உள்ளனர்.

இந்நிலையில், முன்னதாக விழாவில் கலந்து கொள்ளப் போவதாகக் கூறிய மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி திடீரென பின்வாங்கினார். அதற்கு, மேற்கு வங்கத்தில் நடந்த வன்முறையில் பாஜக கட்சியினர் 58 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு திருணாமுல் காங்கிரஸ் கட்சிதான் என்று மோடி குற்றஞ்சாட்டினார். அதனால், அவரது பதவியேற்பு விழாவில் பங்கேற்கப் போவதில்லை என்று மம்தா தெரிவித்துள்ளார்.

மோடி

இதே போன்று, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக், சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல் ஆகியோரும், தமிழ்நாட்டில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினும் பிரதமரின் பதவியேற்பு விழாவில் பங்கேற்கவில்லை.

Last Updated : May 30, 2019, 4:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details