மத்தியப் பிரதேசத்தின் மாண்டசார் மாவட்டம் மல்ஹர்கர் பகுதியில், மே 24ஆம் தேதியன்று பாலைவன வெட்டுக்கிளிகள் கூட்டம் படையெடுத்து உள்ளே நுழைந்தன. இதனை, வேளாண் அறிவியல் துறை விஞ்ஞானிகள் பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளித்து அகற்றியதாக, மாண்டசார் மாவட்ட நீதிபதி மனோஜ் புஷ்ப் கூறினார்.
இந்தப் பாலைவன வெட்டுக்கிளிகள் கூட்டத்தின் பாதிப்பானது ஜூன், ஜூலை மாதங்களில்தான் இருக்கும். ஆனால், தற்போது மே மாதமே அவை வந்துவிட்டதாக சுற்றுச்சூழல் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
தற்போது மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூரில் புகுந்த இந்தப் பாலைவன வெட்டுக்கிளிக் கூட்டம், விவசாய நிலங்களை ஈக்கள் மொய்ப்பது போல் மொய்த்து சூழ்ந்துள்ளது.