தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதிய கல்விக் கொள்கை கல்விக்கான உரிமையை நிலைநாட்டுகிறது - யோகேந்திர யாதவ்

கல்விக்கான உரிமையை நிலைநாட்டுவதால், புதிய கல்விக் கொள்கை வரவேற்கதக்க ஒன்றாக உள்ளது என ஸ்வராஜ் இந்தியா கட்சித் தலைவர் யோகேந்திர யாதவ் தெரிவித்துள்ளார்.

யோகேந்திர யாதவ்
யோகேந்திர யாதவ்

By

Published : Jul 31, 2020, 10:40 PM IST

புதிய கல்விக் கொள்கை குறித்த விவரங்களை மத்திய அரசு ஜூலை 29ஆம் தேதி வெளியிட்டது. ஐந்தாம் வகுப்பு வரை தாய் மொழி கல்வி கட்டாயம், டிஜிட்டல் உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், உயர் கல்வி நிறுவனங்களில் சேர, தேசிய கல்வி முகமை மூலம் பொது நுழைவுத் தேர்வு என பல முக்கிய அம்சங்கள் அதில் இடம்பெற்றுள்ளது.

அதற்கு ஆதரவாகவும் எதிராகவும் பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்துவருகின்றனர். கல்விக்கான உரிமையை நிலைநாட்டுவதால், புதிய கல்வி கொள்கை வரவேற்கதக்க ஒன்று என ஸ்வராஜ் இந்தியா கட்சி தலைவர் யோகேந்திர யாதவ் தெரிவித்துள்ளார்.

யோகேந்திர யாதவ்

இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், "மூன்று முதல் 18 வயது வரையிலான அனைவருக்கும் இலவச கட்டாய கல்வி என்பது சிறப்பான கொள்கை. எனினும், சமூகத்தால் பின்தங்கிய மக்களின் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை" என்றார்.

இதையும் படிங்க: 'மொழிகளைக் கற்க வேண்டுமென்றால் வெட்கத்தைக் கைவிடுங்கள்'

ABOUT THE AUTHOR

...view details