குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு நாடு முழுக்க எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதற்கு எதிராக மாபெரும் அளவில் போராட்டத்தை ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்தனர்.
இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு நடிகை ஸ்வரா பாஸ்கர் பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “நாங்கள் தாமதமாக விழித்தோம். ஆனால் விழித்துவிட்டோம். குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக நாடு முழுக்க விழிப்புணர்வூட்டி நீங்கள் நாட்டை தட்டியெழுப்பிவிட்டீர்கள்“ எனக் கூறினார்.