கொச்சி (கேரளா): தங்கம் கடத்தல் வழக்கில் சிக்கியுள்ள ஸ்வப்னா சுரேஷின் வழக்கறிஞர் ராஜேஷ் குமார் கேரள உயர் நீதிமன்றத்தில் முன் பிணை கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.
இம்மனு மீதான விசாரணை இன்று நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்கம் கடத்தல் வழக்கில் சிக்கியுள்ள ஸ்வப்னா சுரேஷ் தலைமறைவாக உள்ளார். கேரள அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை உயர் அலுவலரான ஸ்வப்னாவின் தங்கக் கடத்தல் விவகாரம், அந்த மாநில அரசுக்கு மிகப்பெரிய நெருக்கடியை உருவாக்கியுள்ளது. கேரள அரசு அலுவலர்கள் உதவியுடன் ரூ.100 கோடி அளவுக்கு தங்கக் கடத்தலில் ஈடுபட்டிருக்கலாம் எனும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடத்தல் வழக்கில் திடீர் திருப்பம்; ஸ்வப்னாவுக்கு எப்படி அரசு வேலை கிடைத்தது?
நாளுக்கு நாள் ஸ்வப்னா சுரேஷ் குறித்த தகவல்கள் வெளியாகி கேரள அரசியலில் புயலைக் கிளப்புகின்றன. இந்த சூழலில், அமெரிக்காவில் வசிக்கும் ஸ்வப்னாவின் தம்பியான பிரைட் சுரேஷ் ஸ்வப்னா மீது பெரும் குற்றச்சாட்டை வைத்துள்ளார். நாங்கள் மொத்தம் மூன்று பேர். துபாயில் தான் குடும்பத்துடன் வசித்தோம். என் அக்கா பத்தாவது கூட தேர்ச்சி பெறவில்லை. அவர் தன் செல்வாக்கு மூலம் தான் அரசு வேலையில் சேர்ந்தார் என்று அதிர்ச்சி அளிக்கும் தகவலை வெளியிட்டுள்ளார்.
பத்தாவது கூட படிக்காத பெண்ணுக்கு எப்படி அரசுப் பணி கிடைத்தது எனும் கேள்வி தற்போது கேரள அரசியலில் சூறாவளியாக சுழல ஆரம்பித்திருக்கிறது. இதற்கு முன்பு ஸ்வப்னா பல்வேறு துறைகளில் பணிபுரிந்துள்ளார். அனைத்து, இடங்களில் சர்ச்சை தான். அபுதாபி விமான நிலையத்தில் பணிபுரிந்தவர் தன் கணவரிடத்தில் விவாகரத்து பெற்று கேரளாவுக்கு வந்தார். அடுத்து ஏர் இந்தியாவில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கு ஒரு அலுவலர் மீது பாலியல் ரீதியாக பொய் புகார் கொடுத்து சிக்கினார்.