தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சட்டப்பூர்வ வழக்காக மாறிய சுப்ரமணியன் சுவாமி பேச்சு - ஐ.நா. சிறப்பு ஆலோசகர் அடாமா டயங்

டெல்லி: சொற்களின் போராக தொடங்கிய பிரச்னை சட்டப்பூர்வ வழக்காக வந்துவிட்டது.

வந்திவிட்டது.
வந்திவிட்டது.

By

Published : May 23, 2020, 7:37 PM IST

பாஜக மாநிலங்களவை உறுப்பினர் சுப்ரமணியன் சுவாமி, கடந்த மாதம் டிஜிட்டல் ஊடகம் ஒன்றுக்கு (அமெரிக்காவை அடிப்படையாகக் கொண்ட ஊடகம்) இஸ்லாமியர்களைப் பற்றி முரண்பாடு ஏற்படுத்தும் வகையில் பேசினார்.

இந்தப் பேட்டி ஒளிபரப்பான பின்பு ஐ.நா. மனித உரிமை ஆர்வலர்கள் பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்தனர். மேலும் ஐ.நா. சிறப்பு ஆலோசகர் அடாமா டயங்(Adama Dieng), கடந்த திங்களன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், "இது ஒரு தவறான பேச்சு என்றும் இது பல பிரச்னைகளை ஏற்படுத்தும் என்றும் கூறியிருந்தார்.

சொற்களின் போராக தொடங்கிய இப்பிரச்னை சட்டப்பூர்வ வழக்குக்கு வரப்போகிறது. சுப்ரமணியன் சுவாமி கூறியதை அவதூறு வழக்காக ஐ.நா. சிறப்பு ஆலோசகர் அடாமா டயங்(Adama Dieng) தொடுத்துள்ளார்.

இது குறித்து சுப்ரமணிய சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில்; ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் பொதுச்செயலாளர் அடாமா டயெங்கிற்கு அவதூறு வழக்குத் தொடுப்பதற்கான எனது முயற்சியில் வெற்றிபெற பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, அலுவலக பொறுப்பாளர்களுக்கு எனது நல்வாழ்த்துக்கள் என பதிவிட்டுளளார்.

இதையும் படிங்க: சுப்ரமணியன் சுவாமியின் இஸ்லாமிய வெறுப்பு பேச்சு: ஐ.நா சிறப்பு ஆலோசகர் கண்டனம்

ABOUT THE AUTHOR

...view details