தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்ட சின்மயானந்தா!

லக்னோ: பிணை மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து பாலியல் வன்புணர்வு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சின்மயானந்தா மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

Chinmayanandha

By

Published : Oct 1, 2019, 8:32 AM IST

பாஜக மூத்தத் தலைவர்களில் ஒருவரான சின்மயானந்தா உத்தரப் பிரதேசத்தில் பல கல்லூரிகளை நடத்தி வருகிறார். தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக சட்டக்கல்லூரி மாணவி ஒருவர் சின்மயானந்தாவுக்கு எதிராக குற்றச்சாட்டு எழுப்பினார். இதனைத் தொடர்ந்து, அந்த மாணவி மாயமானார். இதனால் மாணவியின் தந்தை காவல் நிலையத்தில் சின்மயானந்தா, தன் மகளை கடத்தியாகப் புகார் அளித்தார்.

இதற்கிடையே, காணாமல்போன சட்டக் கல்லூரி மாணவியை ராஜஸ்தானிலிருந்து மீட்டு கொண்டுவந்த உத்தரப் பிரதேச காவல் துறையினர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைக்க உத்தரப் பிரதேச அரசுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர், சின்மயானந்தா கைது செய்யப்பட்ட நிலையில், மாரடைப்பு, உயர் ரத்த அழுத்தம் ஆகியவற்றை காரணம்காட்டி அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

திடீர் திருப்பமாக பணம் பறிப்பதற்காக சட்டக்கல்லூரி மாணவி தன்னை பாலியல் வழக்கில் சிக்க வைத்ததாக பாஜக மூத்தத் தலைவர் சின்மயானந்தா வழக்குத் தொடர்ந்தார். பணம் பறிப்பு வழக்கில் தன்னை கைது செய்வதிலிருந்து தடைவிதிக்கக் கோரி, சட்டக்கல்லூரி மாணவி அலகாபாத் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். பின்னர், சட்டக்கல்லூரி மாணவியை காவல்துறையினர் கைது செய்து 14 நாட்கள் சிறையில் அடைத்தனர். சின்மயானந்தாவின் பிணை மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் அங்கிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details