ஸ்ரீநகரில் ராணுவ சாலை திறப்பு நிகழ்ச்சியில் சந்தேகத்திற்கிடமான ஒரு பொருள் கிடந்ததாக காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
ராணுவ சாலையில் கிடந்த சந்தேக பொருள் - வெடிகுண்டு அகற்றும் படை
ஸ்ரீநகர்: பாண்டிபோரா-ஸ்ரீநகர் சாலையில் ராணுவ சாலை திறக்கும் நிகழச்சி நடைபெற்றது. அப்போது சந்தேகத்திற்கிடமான ஒரு பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Bomb squad checking
இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், பாண்டிபோரா-ஸ்ரீநகர் சாலையில் உள்ள பாப்சன் / நதிஹால் அருகே ராணுவத்தின் சாலை திறப்பு நிகழ்ச்சி (ஆர்ஓபி) இன்று( ஜூன் 13) நடைபெற்றது. அப்போது சாலையில் சந்தேகத்திற்கிடமான பொருள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
இதனால் அங்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டது, பின்னர் வெடிகுண்டு அகற்றும் படை (பி.டி.எஸ்) வந்து பரிசோதனை செய்தனர். இன்னும் பரிசோதனை மேற்கொண்டு வருவதால் அது என்னவென்று இன்னும் சரிவரத் தெரியவில்லை என்றார்.