தமிழ்நாடு

tamil nadu

சர்வதேச விமான போக்குவரத்து மீதான தடை நீட்டிப்பு - மத்திய அரசு

By

Published : Aug 31, 2020, 10:31 PM IST

டெல்லி : திட்டமிடப்பட்ட சர்வதேச பயணிகள் விமானப் போக்குவரத்து தடை செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக சிவில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

சர்வதேச விமான போக்குவரத்து மீதான தடை நீட்டிப்பு - மத்திய அரசு
சர்வதேச விமான போக்குவரத்து மீதான தடை நீட்டிப்பு - மத்திய அரசு

கரோனா பெருந்தொற்று நோய் பரவலைத் தடுக்க கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதி முதல் இந்தியா முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இந்தியாவில் உலகளாவிய விமானப் போக்குவரத்துச் சேவைகளும் தடைசெய்யப்பட்டது.

இதற்கிடையில், உலகளாவிய பயணக்கட்டுப்பாடுகளால் வெளிநாடுகளில் சிக்கித் தவித்துவந்த இந்தியர்களை தாயகம் அழைத்துவர வந்தே பாரத் மிஷனின் கீழ் மே மாதம் முதல் சிறப்பு சர்வதேச விமான சேவைகள் தொடங்கப்பட்டு இயங்கி வருகின்றன.

தளர்வளிக்கப்பட்டு, இருதரப்பு விமானப் போக்குவரத்து பயணங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தாலும் முழுமையான சீரான போக்குவரத்து இன்னும் நடைமுறைக்கு கொண்டுவரப்படவில்லை.

மூன்றாம் கட்ட ஊரடங்கு இன்றுடன் முடிவடையும் நிலையில், அடுத்தக்கட்டமாக தளர்வுகளுடன் ஊரடங்கை செப்டம்பர் 30ஆம் தேதி வரை மத்திய அரசால் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டி.ஜி.சி.ஏ) வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், "திட்டமிடப்பட்ட சர்வதேச பயணிகள் விமானங்களின் இடைநிறுத்தம் செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மத்திய அரசால் வந்தே பாரத் மிஷனின் கீழ் இயக்கப்படும் சிறப்பு விமானங்கள் வழக்கம் போல் இயக்கப்படும்.

மேலும், அனுமதி பெற்ற வழித்தடங்களில் விமானங்கள் இயக்க தடை இல்லை. சரக்கு போக்குவரத்து சேவை தொடரும் " என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details