கரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், கரோனா அறிகுறிகள் உள்ளவர்களும், கரோனா நோயாளிகளுடன் தொடர்பிலிருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், டெல்லி பவானாவில் உள்ள ஹரேவாலி கிராமத்தை சேர்ந்தவர் அலி. இவர் மத்தியப் பிரதேசத்தில் போபால் பகுதியில் நடைபெற்ற சமய மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சென்றார். ஆனால், கரோனாவால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் சொந்த ஊர் செல்ல முடியாமல் அங்கேயே தவித்து வந்ததாக கூறப்படுகிறது.
சுமார் 45 நாள்கள் கழித்து காய்கறி ஏற்றி வந்த லாரியில் டெல்லிக்கு அவர் திரும்பினார். அதனையடுத்து இவர், ஆசாத்பூர் காய்கறி சந்தையில் தனிமைப்படுத்தி மருத்துவ பரிசோதனைக்கு பின்னரே விடுவிக்கப்பட்டார்.