தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

காவலரைக் கடத்திய பிரிவினைவாதிகள்? - காவலரை கடத்திய பிரிவினைவாதிகள்

ஸ்ரீநகர்: காவல் துறையைச் சேர்ந்த ஒருவரை பிரிவினைவாதிகளாக சந்தேகிக்கப்படுபவர்கள் கடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

militants
militants

By

Published : Apr 24, 2020, 1:10 PM IST

காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு வன்முறைகள், கடத்தல் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பல்வேறு தரப்பினர் குற்றஞ்சாட்டினர். இந்நிலையில், சோபியான் மாவட்டத்தில் காவல் துறையைச் சேர்ந்த ஒருவரை அடையாளம் தெரியாத கும்பல் கடத்திச் சென்றுள்ளது.

ஆயுதம் ஏந்திய அடையாளம் தெரியாத நபர்கள் சத்வடன் கிராமத்தில் அமைந்துள்ள காவலரின் வீட்டிற்குள் புகுந்து கடத்தல் சம்பவத்தை மேற்கொண்டதாக காவல் துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

இதனைத் தொடர்ந்து, பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் காவலர் மீட்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

கடத்தல் சம்பவத்தை மேற்கொண்ட அடையாளம் தெரியாத கும்பல் பிரிவினைவாத அமைப்பைச் சேர்ந்தவர்களாக இருக்கக்கூடும் என காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர்.

இதையும் படிங்க: கள பணியாளர்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதலை பொறுத்துக்கொள்ள முடியாது - பிரகாஷ் ஜவடேகர்

ABOUT THE AUTHOR

...view details