கர்நாடக மாநிலம் காட்டன்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கணேஷ். இவர் சாலையில் சென்றுகொண்டிருந்த 10 பேரை சரமாரியாக கத்தியால் வெட்டியுள்ளார். இதில், இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மீதமுள்ள நபர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பெங்களூரில் 10 பேரை கத்தியால் வெட்டிய மனநலம் பாதிக்கப்பட்ட நபர்? குழப்பத்தில் போலீஸ்! - பெங்களூரு கிரைம் செய்திகள்
பெங்களூரு: காட்டன்பேட்டை பகுதியில் சாலையில் சென்றுகொண்டிருந்த 10 பேரை ஒருவர் கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், கணேஷை கைது செய்தனர். அப்போது, அவரிடம் விசாரிக்கையில், "எனக்கு மனநிலை சரியில்லை" என்று மட்டுமே சொல்லி கொண்டிருந்துள்ளார். கணேஷ் கடந்த இரண்டு ஆண்டுகளாக நிம்ஹான்ஸில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரது தாயார் தெரிவித்துள்ளார். ஆனால், காவல் துறை கூற்றுப்படி, கணேஷ் மனநிலை சீராக உள்ளது என்றும் குற்றத்திலிருந்து தப்பிக்கவே மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக பொய் சொல்வதாக கருதுகின்றனர்.
தற்போது அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.