கேரள மாநிலம் திருவனந்தபுரம் அரசு பொது மருத்துவமனையில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 30 வயதுடைய ஒருவர், கரோனா வைரஸ் அறிகுறிகளுடன் மார்ச் 25ஆம் தேதி காலை அனுமதிக்கப்பட்டார். அவரை தனி வார்டில் வைத்து பரிசோதனை செய்யப்பட்டுவந்தது. இந்த நிலையில், அவர் மருத்துவமனையிலிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
கேரளாவில் கரோனா அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டவர் தப்பியோட்டம்
திருவனந்தபுரம்: கரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையிலிருந்து தப்பியோடியவரை காவலர்கள் தீவிரமாக தேடிவருகின்றனர்.
kerala-hospitalkerala-hospital
காலை அனுமதிக்கப்பட்டு மதியம் தப்பியோடியிருப்பதால் சந்தேகமடைந்த காவல்துறையினர், அவரை தீவிரமாக தேடிவருகின்றனர். இது குறித்து காவல்துறையினர் கூறுகையில், தப்பியோடிய நபர் குறித்து அனைத்து காவல்துறையினருக்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. விரைவில் கண்டுபிடிக்கப்படுவார் எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:கேரளாவிலிருந்து தமிழ்நாட்டு தொழிலாளர்கள் வெளியேற்றம் - சுகாதாரத் துறையினர் எதிர்ப்பு