கர்நாடகா மாநிலம் கெம்பகவுடா சர்வதேச விமான நிலையத்தினுள் கருப்பு நிற பை ஒன்று கேட்பாரற்று கிடந்தது. இதனைக் கண்ட பயணி ஒருவர், விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து சந்தேகத்திற்கு இடமாக இருந்த அந்த கருப்பு நிற பையில் வெடிகுண்டு இருப்பதாக பாதுகாவலர்கள் பீதியடைந்தனர். இதனால், அப்பகுதியில் இருந்த பயணிகளை அப்புறப்படுத்தி விட்டு வெடிகுண்டு நிபுணர்கள் ஆய்வு செய்தபோது வெறும் பைதான் என தெரியவந்தது.
கெம்பகவுடா விமான நிலையத்தில் வெடிகுண்டு பீதி...! - கருப்பு பைட
பெங்களூர்: விமான நிலைய வளாகத்திற்குள் சந்தேகத்திற்கிடமான கருப்பு பை கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கெம்பகவுடா விமான நிலையம்
இந்நிலையில், இந்த கருப்பு பையை விட்டுச் சென்ற பயணி ஒருவர், தனது பையை மறந்து விட்டு சென்றதாக விமான நிலைய பாதுகாவலரிடம் தெரிவித்துள்ளார். அப்போது கோபமடைந்த பாதுகாவலர்கள், அந்த பயணியிடம் சோதனை நடத்தினர். அதன்பின், இதுபோன்று பைகளை விட்டுச் செல்வதால் என்ன தவறு நடக்கிறது என்பது உங்களுக்கு தெரியாது. இனிமேல் இதுபோன்ற தவறுகள் செய்யக் கூடாது என பயணியிடம் பாதுகாவலர்கள் எச்சரித்தனர்.
இந்த சம்பவம் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.