மக்களவையில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட விவசாயம் தொடர்பான மூன்று சட்டங்களுக்கு நாடு முழுவதும் விவசாயிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
வேளாண் சட்ட மசோதாவை கண்டித்து சுசி கம்யூனிஸ்ட் நூதன ஆர்ப்பாட்டம்! - Farmer Amendment Bill
புதுச்சேரி: புதிய வேளாண் சட்ட மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி சுசி கம்யூனிஸ்ட் கட்சியினர் காய்கறிகளுடன் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், வேளாண் சட்ட மசோதாவை கண்டித்து புதுச்சேரியில் இன்று சுசி கம்யூனிஸ்டு கட்சியினர் நடுரோட்டில் காய்கறிகளுடன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சுசி கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்து தலைமை தாங்கினார். அப்போது, மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். மத்திய அரசு வேளாண் சட்ட மசோதாவை திரும்ப பெற வேண்டும், விவசாய கூட்டுறவு சங்கம் மீண்டும் வர வேண்டும், சிறு, குறு நடுத்தர விவசாயிகளை அழிக்கும் மசோதாவை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில், ஏராளமான கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.