பாகிஸ்தானில் உளவு பார்த்தாகக் கூறி குல்பூஷன் ஜாதவ் என்ற இந்தியரை பாகிஸ்தான் அரசு கைது செய்து அவருக்கு மரண தண்டனை விதித்தது. குல்பூஷன் ஜாதவின் தண்டனையை ரத்து செய்யக்கோரி இந்தியா சர்வதேச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
குல்பூஷன் ஜாதவுக்கு நீதி கிடைக்க வேண்டும் என அன்றைய வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த சுஷ்மா ஸ்வராஜ் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டார். இந்தியாவின் முன்னணி வழக்கறிஞரான ஹரிஷ் சால்வே குல்பூஷன் ஜாதவின் சார்பாக ஆஜராகி வாதாடினார். குல்பூஷன் ஜாதவ் வழக்கில் வெற்றி பெற்றால் சால்வேவுக்கு வழக்கறிஞர் கட்டணமாக ஒரு ரூபாய் தருவதாகவும் உறுதியளித்தார் சுஷ்மா.
குல்பூஷன் ஜாதவ் குடும்பத்தினருடன் சுஷ்மா எடுத்துக் கொண்ட கடைசி புகைப்படம் சுஷ்மா எதிர்பார்த்தது போலவே சால்வேவின் வாதத் திறமையால் இந்தியா வழக்கில் வெற்றிபெற்றது. இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 6ஆம் தேதி மாலை ஹரிஷ் சால்வேவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மகிழ்ச்சியுடன் பேசிய சுஷ்மா, அவரை சந்தித்து வக்கீல் கட்டணத்தை தருவதாகக் கூறியுள்ளார். ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக சுஷ்மாவுக்கு மாரடைப்பு ஏற்படவே மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட சுஷ்மா இரவு 9 மணியளவில் உயிரிழந்தார்.
இந்நிலையில், சுஷ்மாவின் கடைசி ஆசையை அவரது மகளான பான்சுரி நேற்று நிறைவேற்றி வைத்தார். ஹரிஷ் சால்வேவை அவரது இல்லத்தில் சந்தித்த பான்சுரி சுஷ்மாவின் விருப்பம் போல ஒரு ரூபாய் வக்கீல் கட்டணத்தை சால்வேவிடம் ஒப்படைத்தார். தாயின் விருப்பத்தை நிறைவேற்றிய பன்சூரியின் இந்த செயல், சமூக வலைத்தளத்தில் நெகிழ்ச்சியுடன் பகிரப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: நிழற்படங்களின் வழியாக சுஷ்மா ஸ்வராஜின் நினைவலைகள்!