தோனியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத். இவர் மும்பையில் உள்ள தனது வீட்டில் நேற்று முன்தினம் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இருப்பினும், சிலர் சுஷாந்த் கொல்லப்பட்டிருக்கலாம் என்று இணையத்தில் புது யூகங்களைப் பரப்பிவந்தனர். இதன் காரணமாக பாலிவுட் திரையுலகில் சலசலப்பு ஏற்பட்டது. இதனிடையே சுஷாந்த்தின் உடல் மும்பையிலுள்ள கூபர் மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக கொண்டு செல்லப்பட்டது.
சுஷாந்த் தற்கொலை குறித்து விசாரணை - அமைச்சர் அனில் தேஷ்முக் உறுதி! - Maharashtra
மும்பை: சுஷாந்த் சிங் ராஜ்புத் உடற்கூறாய்வு முடிவில் அவர் தற்கொலை செய்துகொண்டது உறுதியாகியுள்ளதாகவும், தற்கொலை குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்றும் மகாராஷ்டிரா அமைச்சர் அனில் தேஷ்முக் கூறியுள்ளார்.
தற்போது உடற்கூறாய்வின் முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில் அவர் தற்கொலை செய்துகொண்டது உறுதியாகியுள்ளது. இதை மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் உறுதிசெய்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "தற்கொலை செய்துகொண்ட சுஷாந்த்தின் உடற்கூறாய்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. அதில் அவர் தற்கொலை செய்துகொண்டது உறுதியாகியுள்ளது. இருப்பினும், அவரது திரைத்துறை எதிரிகள் கொடுத்த அழுத்தத்தினால், அவர் இந்த முடிவை எடுத்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்படும்" என்றார்