உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயை மாநிலங்களவை நியமன உறுப்பினராக திங்கள்கிழமை (மார்ச் 16) குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்தார். இந்த அறிவிப்புக்குப் பல்வேறு தரப்பினரும் தங்கள் எதிர்ப்புகளைப் பதிவுசெய்து-வருகின்றனர்.
இந்நிலையில் ரஞ்சன் கோகாயைப் பற்றிய அறிவிப்பு நீதித் துறை மீதான நம்பிக்கையைச் சீர்குலைக்கும் என்று உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப் விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், "நம் நாட்டிலுள்ள நீதித் துறையின் சுதந்திரத்தைக் காக்க என்னுடன் சேர்ந்து ரஞ்சன் கோகாய் உள்ளிட்ட நான்கு நீதிபதிகள் 2018 ஜனவரி 12இல் செய்தியாளர்களைச் சந்தித்தோம்.