கர்நாடக மாநிலம், மண்டியா அடுத்துள்ள நாகமங்கலா பகுதியில் பிரபல எழுத்தாளர் சிவராமகவுடா தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் அவரது வீட்டில் செல்லப்பிராணியாக வளர்க்கப்படும் கோழி ஒன்று, வழக்கத்திற்கு மாறாக தனது கழுத்துப்பகுதியில் இருந்து முட்டையிட்டுள்ளது. இரண்டு வருடங்களாக அந்த கோழியை வளர்த்து வந்த அவருக்கு மட்டுமல்லாது, அப்பகுதியை சேர்ந்தவர்களுக்கும் இச்சம்பவம் ஆச்சரியமாக இருந்தது.
கழுத்து பகுதி வழியாக முட்டையிடும் 'அதிசயக்கோழி' - மாண்டியா
மண்டியா: பிரபல கன்னட எழுத்தாளர் வீட்டில் செல்லப்பிராணியாக வலம் வரும் கோழி ஒன்று கழுத்துப் பகுதி வழியாக முட்டையிடும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
கழுத்தில் இருந்து மூட்டையிட்ட அதிசயக் கோழி
இதையறிந்த சுற்றுவட்டார மக்கள் சிவராமகவுடா வீட்டிற்கு வந்து இந்த அதியச கோழியை ஆர்வமுடன் பார்த்து வருகின்றனர். கழுத்தின் வாயிலாக கோழி மூட்டையிடும் வீடியோவை அவர் இணையதளத்தில் வெளியிட்டார். இந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.