மத்தியப் பிரதேசம் இந்தூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் (ஜூன் 9ஆம் தேதி கணக்கின்படி) புதிதாக 45 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்டக்ஸ் என்னும் மருத்துவனையில் 56 வயதான அறுவை சிகிச்சை மருத்துவர் ஒருவருக்கு கடந்த மாதம் 24ஆம் தேதி கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு மருத்துவனையில் சிகிச்சைப் பெற்றுவந்தார்.
இந்த நிலையில், நேற்று நள்ளிரவு அவர் உயிரிழந்தார். அம்மாநிலத்தில் இவருடன் சேர்த்து நான்கு மருத்துவர்கள் இதுவரை கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.