இந்திய ராணுவ தளபதி மேஜர் முகுந்த் நராவனே ஜம்மு காஷ்மீர் பகுதிக்கு இரு நாள் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ச்சியாக எல்லை மீறி தாக்குதல் நடத்திவரும் நிலையில், அப்பகுதிக்கு இந்த தீடீர் பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு நாடுகளும் தற்போது கரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரமாக முன்னெடுத்துள்ள சூழலில் இம்மாத தொடக்கத்திலிருந்தே பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தொடர் தாக்குதல் நடத்திவருகிறது.
நமது அண்டை நாட்டு ராணுவம் இந்த இக்கட்டான சூழலில் இதுபோன்ற அத்துமீறல் நடவடிக்கையை மேற்கொண்டுவருவது மோசமானது, இதற்கான பதிலடியை எவ்வாறு தர வேண்டும் என்பதை ஆய்வு செய்யவே ராணுவ தளபதி பயணம் மேற்கொண்டுள்ளதாக ராணுவ செய்தித்தொடர்பாளர் ராஜேஷ் காலியா தெரிவித்துள்ளார்.
இந்தாண்டு மட்டும் ஆயிரத்து 200 முறையும் கடந்த மார்ச் மாதத்தில் 411 முறையும் ஜம்மு காஷ்மீர் எல்லைப்பகுதியில் பாக் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:கரோனா பாதிப்பை எதிர்கொள்ள இந்திய வெளியுறவுத்துறை மேற்கொள்ளும் முயற்சிகள்...!