தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'நிச்சயம் ஒரு நாள் இஸ்ரோ நிலவுக்கு மனிதர்களை அனுப்பும்' - சிவன் உறுதி - ISRO will send men to the moon

பெங்களூரு: நிச்சயம் ஒரு நாள் நிலவுக்கு மனிதரை அனுப்பும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் உறுதியளித்துள்ளார்.

ISRO will send men to the moon
ISRO will send men to the moon

By

Published : Jan 22, 2020, 2:05 PM IST

பெங்களூருவில் நடைபெற்றுவரும் இஸ்ரோ கருத்தரங்கில் இஸ்ரோ தலைவர் சிவன் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'சந்திரயான் - 3 திட்டத்திற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்திற்காக நான்கு விண்வெளி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த மாத இறுதிக்குள் அவர்கள் ரஷ்யா சென்று பயிற்சி பெறுவார்கள். அதன்பின் அவர்கள் நிலவிற்கு அனுப்பப்படுவார்கள். 1981ஆம் ஆண்டில் விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியரான ராகேஷ் சர்மா ரஷ்ய விண்கலத்தில் பயணித்தார். ஆனால், இம்முறை இந்திய வீரர்கள் இந்திய விண்கலத்தில் பயணிக்கவுள்ளனர். ககன்யான் திட்டம் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் மட்டுமன்று; அது நீண்ட காலத்திற்கு உலகளவில் கூட்டமைப்பை உருவாக்கும் கட்டமைப்புக்கான திட்டமும் கூட’ என்றார்.

நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை இஸ்ரோ செயல்படுத்துமா என்ற செய்தியாளர் கேள்விக்குப் பதிலளித்த சிவன்,' நிச்சயமாக ஒரு நாள் செயல்படுத்தும்' என்றார்.

இதையும் படிங்க: ககன்யான் விண்வெளி வீரர்களுக்கு உணவு தயார் செய்ய ஆலோசனை

ABOUT THE AUTHOR

...view details