தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மோடி பற்றி ஆய்வுக்கட்டுரை சமர்பித்த சூரத் மாணவர்! - பிரதமர் நரேந்திர மோடி

காந்திநகர்: பிரதமர் நரேந்திர மோடி பற்றி ஆய்வுக்கட்டுரையை அரசியல் அறிவியல் துறையின் முனைவர் பட்டம் பயிலும் மாணவர் சமர்பித்துள்ளார்.

modi

By

Published : Mar 18, 2019, 9:58 AM IST

குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்தமேகுல் கவோஷி, அரசியல் அறிவியலில் (political science) முதுகலைப் பட்டம் பெற்ற பின்னர், முனைவர் பட்டத்தை மேற்கொண்டுள்ளார்.

அதில் மேகுல் தனது ஆய்விற்காக பிரதமர் நரேந்திர மோடியின் அரசியல் வாழ்வை தேர்ந்தெடுத்துள்ளார். தற்போது அந்த ஆய்வுக் கட்டுரையைமுடித்துள்ளார்.

இது குறித்து மேகுல் கூறுகையில், 2010ஆம் ஆண்டு மோடி குஜராத்தின் முதலமைச்சராக இருந்தபோது, இந்த ஆய்வுக்கட்டுரையை ஆரம்பித்தேன். இதில், மோடி பற்றிய எனது ஆய்விற்காக 450 பேரிடம் ஆய்வு மேற்கொண்டேன். இதில், 51 விழுக்காட்டினர் சாதகமாகவும், 34.25 விழுக்காட்டினர் எதிராகவும் கருத்து தெரிவித்துள்ளதாக கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details