இதில் ஆச்சரியமிக்க விஷயம் என்னவென்றால், பிரதமர் நரேந்திர மோடியின் முகம் பொருந்திய இந்த ஐஸ்கிரீமை இயந்திரம் மூலமாக தயாரிக்காமல், கைகளாலேயே தயார் செய்கின்றனர்.
இந்த 'மோடி சிதாபால் குல்பி' ஐஸ்கிரீம் 24 மணி நேரத்தில் இருநூறு தயார் செய்யப்படுகின்றன.

இந்த ஸ்பெஷல் ஐஸ்கிரீம் மே30ஆம் தேதி வரை மட்டுமே விற்கப்படும். ஏனென்றால், அன்றைய தினத்தில் தான் மோடி மீண்டும் பிரமராக பதவி ஏற்கிறார்.
இது குறித்து கடையின் உரிமையாளர் அஜ்மர் கூறுகையில், 'மோடி சிதாபல் குல்பி' சூரத் நகரில் மிகவும் பிரபலமடைந்து நன்றாக விற்பனை அடைந்து வருவதாகவும், மக்களவைத் தேர்தலில் பாஜகவினுடைய வெற்றியைக் கொண்டாடும் விதமாக ஏற்கனவே இந்த ஐஸ்கிரீமிற்கு 50 விழுக்காடு தள்ளுபடி அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், மோடியின் முகம் பதித்த இந்த ஸ்பெஷல் ஐஸ்கிரீமில் எந்த ரசாயனமும் சேர்க்காமல், 100 விழுக்காடு இயற்கையான முறையில் தயார் செய்யப்படுவதாக அஜ்மர் உறுதியாகக் கூறியுள்ளார்.