உள்ளாட்சி தேர்தலை நடத்தாத தமிழ்நாடு அரசு, மாநிலத் தேர்தல் ஆணையம் மீது ஜெய் சுகின் என்பவர் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கும், தேர்தலை நடத்த மேலும் ஒரு மாதம் அவகாசம் கேட்டு தமிழ்நாடு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவும் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
முன்னதாக, உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான விவரங்களை டிசம்பர் 13ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.