தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மீண்டும் முழு பலத்துடன் செயல்படும் உச்ச நீதிமன்றம்! - உச்சநீதிமன்றம்

டெல்லி: உச்ச நீதிமன்றம் இன்று முதல் 30 நீதிபதிகளுடன் 12 அமர்வுகளைக் கொண்டு முழு வீச்சில் வழக்குகளை விசாரணை நடத்தவுள்ளது.

supreme court
supreme court

By

Published : Oct 12, 2020, 10:28 AM IST

கரோனா பரவல் காரணமாக 30 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்றம் நேரடி வழக்கு விசாரணைகளை வீடியோ கான்ஃபெரன்சிங் மூலம் நடத்தி வந்தது. தினசரி ஐந்து அமர்வுகள் மூலம் 20 வழக்குகள் விசாரிக்கப்பட்டு வந்தன. போதிய பொதுப் போக்குவரத்து வசதிகள் இல்லாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்களுடன் உச்ச நீதிமன்றத்தின் பதிவேடு செயல்பட்டு வந்தது.

அதனடிப்படையில், வீடியோ கான்ஃபெரன்சிங் மூலம் 2 பிரிவு அமர்வுகள், நான்கு தனி நீதிபதி அமர்வுகளுடன் உச்ச நீதிமன்றம் செயல்பட்டது. இந்நிலையில், இன்று(அக்.12) முதல் 12 அமர்வுகளைக் கொண்ட நீதிபதிகள், முழுவீச்சில் வழக்குகளை விசாரிக்கவுள்ளதாக நீதிமன்ற வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் கூடுதல் கட்டட வளாகத்திலிருந்து ஒதுக்கப்பட்ட வசதி நிறைந்த ஐந்து அறைகளில் வழக்குகள் நடத்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் ஒரு நாளுக்கு உச்ச நீதிமன்றத்தில் 400 முதல் 700 வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன.

இதையும் படிங்க:தோனியின் மகளுக்குப் பாலியல் மிரட்டல் விடுத்த சிறுவன் பிடிபட்டான்!

ABOUT THE AUTHOR

...view details