கர்நாடகாவின் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த அதிருப்தி சட்டப்பேரவை உறுப்பினர்கள் 15 பேர் தங்களின் ராஜினாமா கடிதத்தை ஏற்க சபாநாயகரை வலியுறுத்தும்படி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதன் தீர்ப்பு நாளை காலை வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடக எம்எல்ஏக்கள் வழக்கு; நாளை தீர்ப்பு - Karnataka
டெல்லி: தங்களின் ராஜினாமா கடிதத்தை ஏற்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் கர்நாடகா அதிருப்தி சட்டப்பேரவை உறுப்பினர்கள் தொடர்ந்த வழக்கில் நாளை தீர்ப்பு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
உச்ச நீதிமன்றம்
கர்நாடகாவில் காங்கிரஸ் - மதச்சார்பற்ற கூட்டணி ஆட்சி தொடர்ந்து நடைபெறுமா அல்லது பாஜக ஆட்சி அமைக்குமா என்ற கேள்விக்கு நாளை வெளியாக உள்ள தீர்ப்பு பதில் அளிக்க உள்ளது.
மேலும், கர்நாடக சட்டப்பேரவைக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு ஜூலை 18ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த இரண்டு நிகழ்வுகளால் கர்நாடக அரசியல் களம் சூடு பிடித்துள்ளது.