பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் ஆகியோருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு வந்த நிலையில், பொதுப்பிரிவில் உள்ள ஏழைகளுக்கும் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என பல காலமாக கோரிக்கை எழுப்பப்பட்டு வந்தது. இதனை ஏற்று மோடி தலைமையிலான பாஜக அரசு, பொதுப்பிரிவில் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கியது.
பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான இடஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கு! - பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான இடஒதுக்கீடு
டெல்லி: பொதுப்பிரிவில் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீட்டுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளின் விசாரணை, ஜூலை 16ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்பு திட்டமல்ல எனவும், அது அனைவருக்கும் சம உரிமைகளை பெற்று தருவதற்காக உருவாக்கப்பட்டது எனவும் சமூக ஆர்வலர்கள் பலர் கருத்து தெரிவித்தனர். மற்றொரு தரப்பினர் இதனை எதிர்த்து வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளின் விசாரணைகளை, ஜூலை 16ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில், பொதுப்பிரிவில் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீட்டுக்கு எதிராக திமுக, ராஷ்டிரிய ஜனதா தளம் மட்டுமே நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.