ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டுவந்த 370ஆவது சட்டப் பிரிவை மத்திய பாஜக அரசு சமீபத்தில் ரத்து செய்தது. இந்த நடவடிக்கை இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்று அம்மாநில அரசியல் தலைவர்கள் கொதித்தனர். மற்ற மாநில எதிர்க்கட்சிகளும் பாஜகவுக்கு தங்களின் கண்டனங்களைத் தெரிவித்தன.
ஆனால், அவை யாவையும் பொருட்படுத்தாமல் 370ஆவது சட்டப்பிரிவு நீக்கத்தை மத்திய அரசு அமல்படுத்தியது. இதையடுத்து, இந்த உத்தரவை ரத்து செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அந்த வழக்குகள் எப்போது விசாரணைக்கு வரும் என்ற கேள்வி இருந்து வந்தது.