தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ப. சிதம்பரம் ஜாமீன் மனுமீது இன்று தீர்ப்பு!

டெல்லி: உச்சநீதிமன்றத்தில் ப. சிதம்பரம் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனு மீதான விசாரணை கடந்த வாரம் முடிவடைந்த நிலையில், அதற்கான தீர்ப்பு இன்று அறிவிக்கப்படவுள்ளது.

Chidambaram's bail

By

Published : Oct 22, 2019, 9:13 AM IST

ஐ.என்.எக்ஸ் நிறுவனம் வெளிநாட்டிலிருந்து முதலீடு பெறுவதற்கு, வெளிநாட்டு முதலீட்டு மேம்பாட்டு வாரியம் அனுமதியளித்ததில் ஊழல் நடந்திருப்பதாக சிபிஐ வழக்குப் பதிவு செய்திருந்தது. இந்த வழக்கில் ஆகஸ்ட் 21ஆம் தேதி ப. சிதம்பரம் கைது செய்யப்பட்டார்.

முன்னதாக, முன்பினை கோரி டெல்லி நீதிமன்றத்தில் ப. சிதம்பரம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவுப்படி டெல்லி திகார் சிறையில் சிதம்பரம் அடைக்கப்பட்டார்.

இதனையடுத்து பிணை கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் சிதம்பரம் தாக்கல் செய்த மனு செப்டம்பர் 30ஆம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. அதனை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு மீதான விசாரணை கடந்த வாரத்தில் முடிந்த நிலையில் இன்று தீர்ப்பு வெளியாகவுள்ளது.

இந்த வழக்கின் தீர்ப்பை பானுமதி தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று அறிவிக்கவுள்ளது.

இதையும் படிங்க: 'தமிழீழ விடுதலைப் புலிகள் தடை குறித்த தீர்ப்பாயத்தில் சரியான வாதங்களை எடுத்து வைப்பேன்

ABOUT THE AUTHOR

...view details