தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சாதி, மதத்தை கொண்டு பரப்புரையா? நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு - உச்ச நீதிமன்றம்

டெல்லி: சாதி, மதத்தை கொண்டு பரப்புரை செய்யும் வேட்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

court

By

Published : Apr 15, 2019, 12:16 PM IST

மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக தொடங்கி நடந்துவருகிறது. இதனையொட்டி பரப்புரை சூடுபிடித்து வருகிறது. அதேசமயம் பரப்புரையில் சாதியையும், மதத்தையும் கொண்டு வேட்பாளர்கள் பேசிவருவது சர்ச்சையை ஏற்படுத்திவருகிறது. மேலும், அரசியல் கட்சித் தலைவர்கள் ஒருவரையொருவர் விமர்சனம் செய்யும்போது தனிநபர் தாக்குதல்கள் மற்றும் மிகவும் தரம் தாழ்ந்த வார்த்தைகளை பயன்படுத்தி வருவதற்கும் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தேர்தல் பரப்புரையில் சாதி, மதத்தைக் கொண்டு பரப்புரை செய்யும் வேட்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சாதி, மதத்தை கொண்டு பரப்புரை செய்யும் வேட்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு அறிவுறுத்தியுள்ளது. மேலும், வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேசும் அரசியல்வாதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது ஆணையத்தின் கடமை எனவும் கூறியுள்ளது.

முன்னதாக விதிகளை மீறும் வேட்பாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யவோ, நோட்டீஸ் அனுப்பவோ மட்டுமே அதிகாரம் உள்ளது தகுதி நீக்கம் செய்யும் உரிமை இல்லை என தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் பதிலளித்தது.

ABOUT THE AUTHOR

...view details