தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பணமதிப்பிழப்பில் செல்லாமல் போன பணத்தை ஏற்றுக்கொள்ளும் வழக்கு:ரிசர்வ் வங்கி பதிலளிக்க உத்தரவு

டெல்லி: பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது செல்லாமல் போன ரூ. 1.17 கோடியை ஏற்றுக்கொள்ள தொடரப்பட்ட வழக்கில் ரிசர்வ் வங்கி பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

By

Published : Aug 30, 2019, 11:20 PM IST

பணமதிப்பிழபு

ரூ. 500, ரூ.1000 ஆகிய நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அறிவித்தார். டிசம்பர் 30ஆம் தேதிக்குள் பணமதிப்பிழக்கப்பட்ட ரூ.500, ரூ.1000 ஆகிய நோட்டுகளை வங்கியில் சமர்ப்பித்து அதற்கு ஈடான நோட்டுகளை பெற்று கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில், திருப்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் டிசம்பர் மாதம் 30ஆம் தேதி ரூ.1.17 கோடி பணத்தை தமிழ்நாடு வணிக வங்கியில் செலுத்தியுள்ளார். ஆனால், அதனை வங்கி வாங்க மறுத்துள்ளது. இதுகுறித்து தொழிலதிபர் ரிசர்வ் வங்கிக்கு மனு அனுப்பியுள்ளார். ஆனால், பணத்தை பெற ரிசர்வ் வங்கியும் மறுத்துள்ளது.

இந்நிலையில், தொழிலதிபர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதனை ரமணா, அஜய் ரஸ்தோகி கொண்ட அமர்வு விசாரணைக்கு எடுத்தது. இதுகுறித்து, மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி பதிலளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details