தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'விலங்குகளை விரட்ட ரப்பர் குண்டுகளை ஏன் பயன்படுத்தக் கூடாது?' - உச்ச நீதிமன்றம் - Chief Justice SA Bobde

டெல்லி: விலங்குகளைக் கொல்ல ஊக்குவிக்கும் மாநிலங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரிய வழக்கில் மாநில அரசுகள் பதிலளிக்குமாறு உத்தரவிட்ட நீதிபதிகள், விலங்குகளை விரட்ட ரப்பர் குண்டுகளை ஏன் பயன்படுத்தக் கூடாது என்றும் கேள்வி எழுப்பினார்.

supreme-court-issues-notice-to-states-on-killing-of-wild-animals
supreme-court-issues-notice-to-states-on-killing-of-wild-animals

By

Published : Aug 1, 2020, 4:36 AM IST

பயிர்களை அழிப்பதைத் தடுக்க காட்டு விலங்குகளைக் கொல்ல ஊக்குவிக்கும் மாநிலங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி ஒடிசா எம்பி அனுபவ் மொஹந்தி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே தலைமையிலான அமர்வுக்கு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

மொஹந்தி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சித்தார்த் லுத்ரா, வனப் பகுதிக்குள் மனிதர்கள் தங்கள் வாழ்விடங்களை அமைத்துக்கொள்வதே வன விலங்குகளுக்கும் மனிதர்களுக்குமிடையே நடைபெறும் மோதல்களுக்கு காரணம் என்று வாதிட்டார்.

இதுகுறித்துப் பதிலளிக்க பிகார், கேரளா, இமாச்சலப் பிரதேச மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பிய நீதிபதிகள், விலங்குகளை விரட்ட ரப்பர் குண்டுகளை ஏன் பயன்படுத்தக் கூடாது என்றும் கேள்வி எழுப்பினர்.

ABOUT THE AUTHOR

...view details