தெலங்கானா மாநிலத்தில் தீபாவளியன்று பட்டாசுகள் வெடிக்க அம்மாநில உயர் நீதிமன்றம் தடைவிதித்திருந்தது. உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவின்படி தெலங்கானா அரசு ஒரு ஆணையைப் பிறப்பித்துள்ளது. அதில் பட்டாசுகள் வாங்கவோ, விற்கவோ வேண்டாம் எனப் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாக விற்பனையாளர்கள் பட்டாசுகள் விற்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. தீபாவளிக்காக ஏற்கனவே வாங்கி வைத்திருக்கும் பட்டாசுகளையும் வெடிக்கக் கூடாது என பொதுமக்களுக்கு அறிவுறுத்தியது.
இதற்கிடையே நவம்பர் 9ஆம் தேதி தேசிய பசுமை தீர்ப்பாயம் பட்டாசு பயன்பாடு குறித்த வழிகாட்டுதல்களை வெளியிட்டது. இந்நிலையில் தெலங்கானா மாநிலத்தில் பட்டாசுக்கு தடை விதித்த உயர் நீதிமன்ற உத்தரவுகளில் உச்சநீதிமன்றம் சில திருத்தங்களை வெளியிட்டுள்ளது. அதில்
1. காற்று மாசு அதிகமாக இருக்கு பட்சத்தில் பட்டாசுகளை வாங்குவதற்கு தடை.