கரோனா வைரஸ் நோயின் தாக்கம் காரணமாக குடிபெயர்ந்த தொழிலாளர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, இருப்பிடம், உணவு உள்ளிட்ட பல அடிப்படை வசதிகளை மத்திய, மாநில அரசுகள் தொழிலாளர்களுக்கு செய்து தர வேண்டும் என மனித உரிமை ஆர்வலர் மேதா பட்கர் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கை நீதிபதிகள் அசோக் பூஷன், சஞ்சய் கிஷன் கவுல், எம்.ஆர். ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்துவருகிறது.
'குடிபெயர்ந்த தொழிலாளர்களை 15 நாள்களுக்குள் சொந்த மாநிலத்துக்கு இட்டுச் செல்ல வேண்டும்' - உச்ச நீதிமன்றம் அதிரடி! - வெளிமாநில தொழிலாளர்கள் விவகாரம்
15:11 June 05
டெல்லி: குடிபெயர்ந்த தொழிலாளர்களை 15 நாள்களுக்குள் சொந்த மாநிலத்துக்கு இட்டுச் செல்ல வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பேருந்து, ரயில் ஆகியவற்றில் பயணம் மேற்கொள்ளும் தொழிலாளர்களிடமிருந்து கட்டணம் வசூலிக்கக் கூடாது, மாநில அரசுகளின் கோரிக்கையை ஏற்று ரயில்வே துறை போதுமான எண்ணிக்கையில் ரயில்களை இயக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் முன்னதாக உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை இன்று தொடங்கியது.
சிக்கித்தவித்துவரும் அனைத்து தொழிலாளர்களையும் 15 நாள்களுக்குள் சொந்த மாநிலத்துக்கு அனுப்பிவைக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ஜூன் 3ஆம் தேதி வரை, 4,200 ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டதாக தெரிவித்தார்.
பெரும்பாலான ரயில்கள் உத்தரப் பிரதேசம், பிகார் ஆகிய மாநிலங்களுக்கு இயக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை, ஒரு கோடி தொழிலாளர்களை அவர்கள் விரும்பும் மாநிலத்துக்கு இட்டுச் சென்றதாகவும் அவர் தெரிவித்தார். மீதமுள்ள தொழிலாளர்கள் குறித்த விவரத்தையும், இடமாற்றம் செய்ய எத்தனை ரயில்கள் தேவைுப்படும் என்பதையும் மாநில அரசுகள் தெரிவிக்க வேண்டும் எனவும் மேத்தா கூறியுள்ளார்.
இதையும் படிங்க:7 எம்.எல்.ஏ.க்களின் தகுதிநீக்க நடவடிக்கைகளை இரண்டு வாரங்களுக்குள் முடிக்க உத்தரவு!